ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு:மே 2 வரை கார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு தடை நீட்டிப்பு!
டெல்லி நீதிமன்றம் ,ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மே 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது, அவரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி ஓ.பி.சைனி முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கார்த்தி சிதம்பரத்திடம் விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 2 ஆம் தேதி வரை நீட்டித்து, அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.