எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை!
15 நாளுக்கு ஒருமுறை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையில் மாற்றம் செய்து வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து அதன் விலையை உயர்த்தியோ அல்லது குறைத்தோ வந்தன.
பின்னர் தினமும் அதன் விலையில் மாற்றம் கொண்டு வர தொடங்கின. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல்–டீசல் விலை ரூ.10 உயர்ந்து உள்ளது. தினந்தோறும் அவற்றின் விலையில் மாற்றம் ஏற்படுவதால், லாரி வாடகை உள்பட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் வாடகையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் சர்வதேச விலை நிலவரத்தை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது, சுதந்திர சந்தைவிலை நிர்ணயம் என்பதில் இருந்து பின்வாங்கப்போது கிடையாது என்று கூறிவிட்டார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது ஜிஎஸ்டி
வரிவிதிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டால் பயனாளர்கள் பயன்அடைவார்கள் என்றார்.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த வேண்டாம் மற்றும் சர்வதேச சந்தையில் விலையேற்றம் காரணமாக எழும் நஷ்டத்தில் ஒருபங்கை ஏற்றுக்கொள்ளுங்கள் என எண்ணெய் நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு வருவாய் மந்தமான நிலையை அடைந்த நிலையில் உற்பத்தி வரியை குறைக்கும் வாய்ப்பும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.