Categories: வணிகம்

எங்களை கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எளிதாக வெளியேற்ற முடியாது! அமெரிக்காவுக்கு ஈரான் சவுக்கடி

Published by
Venu

ஈரான்  அமெரிக்கா கோரி வருவது போல  எண்ணெய் சந்தையில் இருந்து அவ்வளவு எளிதாக  எங்களை விலக்கி வைக்க முடியாது என்று  கூறியுள்ளது.

ஈரானின் மூத்த எண்ணெய் நிறுவன அதிகாரி இதுகுறித்து கூறும்போது, “அமெரிக்கா கோரி வருவது போல அவ்வளவு எளிதாக சர்வதேச எண்ணெய் சந்தையிலிருந்து எங்களை விலக்கி வைக்க முடியாது. ஈரான் ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பேரல் எண்ணெய்யை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எங்களை சர்வதேச சந்தையிலிருந்து சில மாதங்களில்  நீக்கிவிடலாம் என்று நினைப்பது சாத்தியமற்றது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று  மிரட்டல் விடுத்தது.

அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில்  2015-ம் ஆண்டில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

ஈரான் அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஈரான்னின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய் பிற நாடுகள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

2 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

2 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

3 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

3 hours ago

“18 வயதில் ரேஸிங் தொடங்கினேன்…ரேஸ் முடியும் வரை நடிக்க மாட்டேன்” அஜித் குமார் அதிரடி அறிவிப்பு!

துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…

3 hours ago

“திருப்பதியில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும்” – பவன் கல்யாண்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…

4 hours ago