எகிறிய பெட்ரோல்,டீசல் விலை …!மக்கள் கடும் அவதி …!
4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது,இதேபோல் பெட்ரோல் விலையும் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 76 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும் நிலையில் , டீசல் விலை முதன்முறையாக 68 ரூபாயை கடந்து 68 ரூபாய் 12 பைசாவிற்கு விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
2012 முதல் 2016 வரையிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் மீதான கலால் வரி 11 ரூபாய் 77 பைசாவும், டீசல் மீதான கலால் வரி 13 ரூபாய் 47 பைசாவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத்தொடங்கிய நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் குறைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.