உள்ளூர் உற்பத்தியாளர்களை காப்பாற்ற இறக்குமதி வரியை ஏற்றிய அரசு
சல்போனேடட் நாப்தலீன் பார்மல்டிஹைடு போன்ற ரசாயன பொருட்கள் சீனாவில் இருந்து மிக குறைந்த விலையில் இறக்குமதி செய்யபடுவதால், உள்ளூர் தொழிறசாலைகளும் உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். இதனால் அந்த இறக்குமதி பொருட்களுக்கு குவிப்பு வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பொருள் குவிப்பு வரி அடுத்த 5 ஆண்டுகளுக்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விசாரிக்கும் பொறுப்பை ஏற்குமாறு டிஜிஏடி துறைக்கு ஹிம்மாத்ரி சிறப்பு ரசாயன தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்தது. விசாரித்து முடிக்கையில், டிஜிஏடி ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்தது. இறக்குமதி வர்த்தகமும், உள்நாட்டு தயாரிப்ப்பு வர்த்தகமும் சமநிலையில் இருக்க இத்தகைய வரி விதிப்பு நடவடிக்கை அவ்வபோது எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source : dinasuvadu.com