உலக வங்கி எச்சரிக்கை! கச்சா எண்ணெய் விலை உயரும்!
உலக வங்கி , இந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் வரை உயரும் என தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2017-ம் ஆண்டில் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 3,548 ரூபாயாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும், அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான ரஷ்யாவும் உற்பத்தியை குறைத்துள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 4 ஆயிரத்து 351 ரூபாய் வரை உயரும் என உலக வங்கி கணித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும். அதனால், 80 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மானியச்சுமை கூடும் என்பதுடன், சமூக நலத்திட்டங்களுக்கு செலவிடும் தொகை குறையும் என தெரிகிறது. அதனால், பணவீக்க விகிதம் அதிகரிப்பதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.