உர்ஜித் படேல் ராஜினாமா எதிரொலி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமனம்..!
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார் . மத்திய அரசு இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அற்புதமாக செயல்பட்டு வந்த ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு புதிதாக
உர்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டார் . இவரையும் மத்திய அரசு அடாவடியாக கையாண்டதால் அவர் இந்தப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.அதேபோல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் சுர்சித் பால்லா இன்று தீடிர்ரென்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுள்ளார்.தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் சக்தி காந்த தாஸ்.