உயர்நீதிமன்றம் கண்டனம்!வங்கிகள் கோடீஸ்வரர்களுக்கு ஒரு நியாயம்?டுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு ஒரு நியாயம்?

Default Image

சென்னை உயர் நீதிமன்றம் கோடீஸ்வரர்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு கடன் கொடுக்கும் போது வேறு மாதிரியாக நடத்துவதாக  கண்டனம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை கேளூரை சேர்ந்த ஏழை மாணவி மதியழகி 2011-12 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்காக வங்கியில் சுமார் மூன்றரை லட்சம் ரூபாய் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்ததை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பரிசீலிக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டது.

அதைப் பரிசீலிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சசிதரன் வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

கோடீஸ்வரர்களுக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் கடன் கொடுக்கும் வங்கிகள், ஏழை மாணவிக்கு கல்வி கடன் கொடுக்காமல் அலைகழித்தற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மாணவி மதியழகி படிப்பை முடிக்கும் வரை இந்த வழக்கை இழுத்தடித்து அவருடைய கோரிக்கையையே வங்கி செல்லாததாக ஆக்கி விட்டதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

50 நிறுவனங்கள் 48 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனை வங்கிக்கு திருப்பி செலுத்தாத நிலையில், கல்வி கடனை திருப்பி செலுத்தாதவர்கள் என்று பெரிதாக எந்த வழக்கும் இல்லை என்பதை நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

கல்விக் கடன் மறுப்பதன் மூலம் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்களின் சேவையை நாடு பெறுவதை மறுத்து வருவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக வங்கி நிர்வாகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை 2 வாரத்தில் மனுதாரருக்கு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்