உணவு முதல் அழகு: சாதன நுகர்பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க சீனா திட்டம்..!!
நுகர்பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடன் நடைபெற்ற வர்த்தக போர் முடிவுற்றதாக கூறப்படும் நிலையில் இந்த திட்டத்துக்கு அந்நாட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு இதேபோல் 200 பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
இந்நிலையில், உணவு முதல் அழகு சாதனப்பொருட்கள் வரையிலான பல நுகர்வுப் பொருட்களுக்கு இறக்குமதி வரியைக் குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்