இறக்குமதி வரி 10 சதவீதம் உயர்வு…!!

Default Image

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரிசெய்ய முடியாமல் திணறி வருகின்ற மத்திய பாஜக அரசு, ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் 15 பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மின்னணு, தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் சர்க்யூட்போர்டுகள், பேஸ் ஸ்டேசன் மற்றும் மின்னணுப் பொருட்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின் விலை உயர்கிறது.
இதனையடுத்து, குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்கள் மீதான வரி 20 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படாத பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்