இரண்டாவது நாளாக வங்கிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு!பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை முடக்கம்!
இரண்டாவது நாளாக இன்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் தொடர்வதால், பல லட்சம் வங்கி வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைகள் தேங்கிக் கிடக்கின்றன.
21 பொதுத்துறை வங்கிகள், 13 தனியார் வங்கிகள், ஆறு பன்னாட்டு வங்கிகள், 56 கூட்டுறவு கிராமப்புற வங்கிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக வங்கி ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் நேற்றும் இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேரளா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டம் முழுஅளவில் காணப்பட்டது. அங்கு வங்கிப் பணிகளுடன் ஏடிஎம் சேவைகளும் முடங்கின. இதன் பாதிப்புகள் இன்றும் பல்வேறு இடங்களில் காணப்படும் என்று கூறப்படுகிறது. ஆயினும் பல தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கின.
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் கண்காணிப்பு அமைப்பான அசோசெம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.