இன்றைய(மே-18)பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.78.46 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-18) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.46 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.80 காசுகளாகவும் உள்ளன.
கடுமையாக உயர வாய்ப்பு?
இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை வரும் வாரங்களில் கடுமையாக உயரும் என நிதி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரும் வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.55 வரையும், டீசல் விலை ரூ.4 வரையும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தலுக்கு முன்பு சுமார் 19 நாட்களாக ஒரே விலையிலிருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தலுக்கு பின் தற்போது உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.