இன்று அதிகாலை மும்பை வர்த்தக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
இன்று அதிகாலை 5 மணியளவில் மும்பையின் FORT பகுதியில் உள்ள பட்டேல் சேம்பர்ஸ் என்ற வர்த்தகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
18 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் முக்கியப் பணி என்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
மழை பெய்ததன் காரணமாக மின்சார கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தீ வேகமாகப் பரவியதால் கடுமையான வெப்பமும் புகைமூட்டமும் காணப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.