ஏழை மக்களுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி உள்பட 3 இந்திய வம்சாவளியினர் தங்களது ஆஸ்தியில் பாதியை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பில் கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை பில் அன்டு மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அதற்கு வழங்கினர்.
இதைத் தொடர்ந்து இந்தியா, கனடா, சவுதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த உலக பணக்காரர்கள் பலரும் இதே போன்று தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழைகளுக்காகவும், இயற்கைப் பேரிடர், போர் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்காகவும், சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களைவதற்காகவும் அந்த அறக்கட்டளைக்கு எழுதி வைத்தனர்.
அந்த வரிசையில் தற்போது இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனியும், அவரது மனைவி ரோஹினி நிலேகனியும், தங்கள் சொத்துகளை பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் சேவைகளுக்கு வழங்குவதாக பகவத் கீதையின் கருத்துக்களை மேற்கொள் காட்டி கடிதம் எழுதியுள்ளனர்.
இதே போன்று மேலும் சில இந்திய வம்சாவளி தம்பதிகளும் தங்களது சொத்துக்களை அந்த அறக்கட்டளைக்கு கொடையளிக்க முன்வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…