மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க உத்தேசித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெ விலை, 80 டாலர்களை கடந்து விட்ட நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க, மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக, கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை மற்றும் பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் ஓரிரு நாட்களில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாத இறுதியில், வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி வரியை குறைப்பதன் மூலம், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
சென்னையில் பெட்ரோல்,டீசல் விலை:
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 6 மணி முதல் இந்த விலை அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…