இந்திய வெளியுறவு அமைச்சகம் மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெற வேண்டும்!
அமலாக்கத்துறை , வங்கி மோசடியாளர்களின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்வாங்கியவர்கள் அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் வெளியுறவு அமைச்சகத்துக்கு அமலாக்கத்துறை ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆந்திர வங்கி உட்படப் பல்வேறு வங்கிகளில் பத்தாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத தொழில்அதிபர்கள் நிதின், சேட்டன் சந்தேசரா ஆகியோரின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதேபோல் மும்பையில் உள்ள மண்டலக் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.