இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் 49காசுகள் வீழ்ச்சி!

Default Image

வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக  வீழ்ச்சியடைந்து  69ரூபாய் என்கிற நிலைக்கு சென்றது.

அமெரிக்க டாலரை  வங்கிகளும் இறக்குமதியாளர்களும் அதிகமாக வாங்கி வருகின்றனர். பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிக அளவில் வாங்கி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில் ரூபாய் மதிப்பு இன்று காலையில் வணிகநேரம் தொடங்கியதுமே 28காசுகள் வீழ்ச்சியடைந்து இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக 68ரூபாய் 89காசுகளாக குறைந்தது. அடுத்த சில நிமிடங்களில் ரூபாய் மதிப்பு மேலும் 21காசுகள் வீழ்ச்சியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக 69ரூபாய் என்கிற அளவைத் தாண்டியது. மொத்தத்தில் இன்று ஒரேநாளில் 49காசுகள் சரிந்து 69ரூபாய் 10காசுகளாக இந்திய ரூபாயின் மதிப்பு இருந்தது. இதற்கு முன் ரூபாய் மதிப்பு 2016நவம்பர் 24ஆம் நாள் 68ரூபாய் 73காசுகளாக இருந்ததே மிகக் குறைந்த அளவாக இருந்தது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்