வைர வியாபாரி மெகுல் சோக்சி மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியா திரும்புவதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,540 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் வைர வியாபாரியான நீரவ் மோடியுடன் அவரது தாய் மாமனான மெகுல் சோக்சி மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு எழுதியுள்ள கடிதத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை சோக்சி மறுத்துள்ளார். வங்கி மோசடி தொடர்பான சி.பி.ஐ.-ன் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள Diamond R US மற்றும் Steller Diamond நிறுவனங்களில் தான் பங்குதாரர் இல்லை என்றும் மெகுல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் இந்தியா திரும்புவதை பாதுகாப்பற்றதாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். தமது உடல்நிலையை கருத்தில் கொண்டு 6 மாதங்கள் வரை பயணிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், மெகுல் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.