ஆய்வில் திடுக் தகவல்!முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் தேவை அதிகரிப்பு!
கடந்த மே மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசலின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில், இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாடு குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வில், கடந்த ஜனவரி முதல் மே வரையிலான 5 மாதங்களில் டீசல் பயன்பாடு 35 புள்ளி 2 மில்லியன் டன் என்று தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகம் என்றும், இந்த ஆண்டு இறுதியில் கணக்கிடும்போது, டீசல் பயன்பாடு மேலும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தைவிட, மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை 7 புள்ளி 6 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு 2 புள்ளி ஒன்று இரண்டு மில்லியன் டன்னாக இருந்த மாதாந்திர தேவை, தற்போது 2 புள்ளி 2 ஏழு மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.