அமெரிக்காவுக்கு சீனா பதில்…!வர்த்தகப் போரில் எந்த விலையையும் கொடுக்க தயார்…!
சீனா வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்காவுக்கு பதில் அளித்துள்ளது.
சீனா பொருட்கள் மீது கூடுதலாக 100 பில்லியன் டாலர் மதிப்பு மிக்க வரியை விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து சீனா வர்த்தக அமைச்சகம் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறும்போது, ”சர்வதேச வர்த்தகத்தில் ஒரு தலைப்பட்சமாக அமெரிக்கா நடந்து கொள்ளும் என்றால், வர்த்தக போரில் எந்த விலையையும் கொடுக்க சீனா தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக சீனப் பொருட்கள் மீது 50 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கட்டணங்களை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அறிவார்த்த சொத்துரிமையை சீனா திருடுகிறது என்று ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.
சீனப் பொருட்கள் மீது கூடுதல் கட்டணங்களை அமெரிக்கா விதித்ததற்குப் பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க இறக்குமதிப் பொருட்களூக்கு 3 பில்லியன் டாலர்கள் கட்டணம் விதித்தது சீனா.
மேலும் சுமார் 128 அமெரிக்கப் பொருட்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த கட்டணச் சலுகைகள், கழிவுகளை சீனா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.