அமலாக்கத்துறை அதிரடி !ரூ.1,122 கோடி மதிப்புள்ள டைமண்ட் பவர் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியது!

Default Image

அமலாக்கத்துறை,குஜராத் மாநிலம் வதோதரராவிலிருந்து இயங்கும டைமண்ட் பவர் நிறுவனத்தின் ரூ.1,122 கோடி மதிப்பு வாய்ந்த சொத்துகளை  முடக்கியது.

இது குறித்த விவரம் வருமாறு,11 வங்கிகளில் ரூ.2,654 கோடி பணம் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததாக டைமண்ட் பவர் (டிபிஐஎல்) நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.1,122 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இன்று முடக்கியது.

இந்த மாத தொடக்கத்தில் சிபிஐ ஒரு எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமலாக்கத்துறை வதோதராவின் சொத்துகளை முடக்கியது. நிறுவனத்தின் வளர்ச்சி பங்குதாரர் எஸ்.என்.பட்நாகர் மற்றும் அவரது இரு மகன்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஆகியோரும் வங்கி மோசடியில் ஈடுபட்டதான பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்நிறுவனம் கேபிள்களையும் மின் உபகரணங்களையும் உற்பத்தி செய்கிறது.

இது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் கூறுகையில், ”நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் இயக்குநருக்குச் சொந்தமான சொத்துகளை நாங்கள் முடக்கிவிட்டோம். மேலும் நடவடிக்கை தொடங்குவதற்காக அதிக சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 11 பொது மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து கடன் வசதிகளை மோசடியாகப் பெற்ற வகையில், டிபிஐஎல் நிறுவனத்தின் நிர்வாகம் மூலமாக அதன் இயக்குநர்களுக்கு எதிராக அவர்கள் எங்கும் தப்பித்துச் செல்லமுடியாதபடி லுக்அவுட் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

கால அளவிலான கடன்களைப் பெறவும் கடன் வசதிகளைப் பெறவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் வழங்கப்படும் கடன்வரம்புகளின் விவரங்களை கூட்டமைப்பு மூலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்திய ரிசர்வ் வங்கியின் கடன்மோசடியாளர்கள் பட்டியலும் இசிஜிசி எச்சரிக்கைப் பட்டியலிலும் அவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2008லேயே கூட்டமைப்பு உருவாக்கியதில் ஆக்ஸிஸ் வங்கி முன்னணி வங்கியாகவும், கடன் அளிக்கும் பணத்திற்கான அளவை வரையறுப்பதில் பேங்க் ஆப் இந்தியா முன்னணியிலும் இருந்தன.

அதிக அளவிலான பணப் பரிவர்த்தனைத் திட்டங்களைப் பற்றி வங்கிகளுக்கு அறிக்கையை வழங்க டிபிஐஎல் திட்டமிட்டிருந்தது. ஆனால் இவை எதுவும் உரிய பதிவுகளில் இடம்பெறவில்லை. எனினும் தி பேங்க் ஆப் இந்தியாவின் உயரதிகாரிகள் நிறுவனத்துக்கு கடன் வரம்புக்கான பணத்தொகையை குறைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இந்நிறுவனம், கடன் வரைவுக்கான அதிகாரத்தைப் பெற தலைமை வங்கிக்கு தவறான பதிவுகளை சமர்ப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கடன் உத்தரவுக் கடிதத்தை வழங்குவதற்காக கடன் வரம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பலவும் டிபிஐஎல்லால் வழங்கப்படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கடன்வரம்பு மீது கட்டணத்தொகை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori