அமலாக்கத்துறை அதிரடி!வைர வியாபாரி நீரவ் மோடியின் ரூ.170 கோடி சொத்துக்கள் முடக்கம்!
திங்களன்று வைர வியாபாரி நீரவ் மோடியின் 170 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் போலி உத்தரவாதக் கடிதத்தைப் பெற்று சுமார் 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாக வைரவியாபாரி நீரவ் மோடி குறித்து சிபிஐ அமலாக்கத்துறை தனித்தனியே விசாரித்து வருகிறது.
இந்நிலையில், திங்களன்று பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீரவ் மோடி, அவருடைய சகோதரர் நீஷல் மோடி, அவர்களது நிறுவனங்களுக்குச் சொந்தமான தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் இருந்த 58 கோடி ரூபாய் பணம் உள்ள 108 வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், போர்ஸ்செ ஏஜி, 2 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் உள்பட 11 வாகனங்களும் அடங்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.