அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாரத ஸ்டேட் வங்கி!இனி பழைய காசோலைகள் செல்லாது…..

Published by
Venu

வரும் 31 ஆம் தேதிக்கு மேல் பாரத ஸ்டேட் வங்கியுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் பாரத பெண்கள் வங்கியின் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல துணை வங்கிகள்  பாரத ஸ்டேட் வங்கிக்கு செயல்பட்டு வந்தன.ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி,திருவாங்கூர் உள்ளிட்ட பல வங்கிகளும் பாரத பெண்கள் வங்கியும் கடந்த வருடம் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்து இணைக்கப்பட்ட வங்கிகளின் பெயரும் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்தி அந்த வங்கிகளில் ஐ எஃப் எஸ் சி குறியீட்டு எண்களும் மாற்றப்பட்டன.

பெயர் மாற்றம் மற்றும் ஐ எஃப் எஸ் சி குறியீட்டு எண் மாற்றம் காரணமாக புதிய காசோலை புத்தகங்களை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும் படி வாடிக்கையாளர்களை வங்கி கேட்டுக் கொண்டது. பெரும்பாலான வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க அது இந்த வருடம் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி  தற்போது இந்த மாதம் 31 ஆம் தேதிக்குப் பின் பழைய காசோலைகள் செல்லாது என அறிவித்துள்ளது. இதுவரை புதிய காசோலை புத்தகங்கள் வாங்காதவர்கள் அதை இணைய தளம், ஏடிஎம் கள் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என வங்கி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்! 

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

2 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

2 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

2 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

3 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

3 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

3 hours ago