ஆர்பிஐ,ஜன் தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கை அம்மாதம் முடியும் வரை முடக்க முடிவு செய்துள்ளது.
அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற பெயரில் கடந்த 2014ல் ஜன் தன் வங்கி கணக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசின் மானியங்கள் இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கிக் கணக்கில் சில மாற்றங்களை கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
இந்த கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வடிவில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு மாதமுடிவு வரை முடக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதனால் ஹெச்டிஎப்சி உள்ளிட்ட தனியார் வங்கிகள், அடிப்படை கணக்குகளை சாதாரண கணக்குகளாக மாற்றி வருகிறது.
ஆனால், இவ்வாறு வங்கி கணக்கு மாற்றப்பட்டால், குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டிய நிலை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும். தவறும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த நேரிடும். மத்திய அரசு இணைய பரிவர்த்தனையை முன்னிருத்திய நிலையில், ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான வங்கி கணக்கு பயன்பாட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…