அடுத்த சில நாட்களில் வோடஃபோன்- ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைப்பிற்கு ஒப்புதல்!
மத்திய தொலைத்தொடர்புத்துறை, வோடஃபோன், ஐடியா அலைபேசி நிறுவனங்கள் இணைவதற்கு அடுத்த சில நாட்களில், ஒப்புதல் அளிக்க உள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத்துறை செயலாளர் அருணா சுந்தரராஜன், வோடஃபோன்-ஐடியா இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கையெழுத்திடவுடன், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைவதற்கு அனுமதியளிக்கும் ஆவணங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இருபெரும் செல்பேசி சேவை நிறுவனங்களான வோடஃபோனும், ஐடியாவும் ஒன்றாக இணைக்கப்படுவது, உலகளவில், இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் உருவாக உதவிடும். வருகிற 26ஆம் தேதி நடைபெறும் நிறுவனங்களின் இயக்குநர்கள் கூட்டத்தில், புதிய பெயர் அறிவிக்கப்பட இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.