#Breaking:அதிர்ச்சி…வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு !

பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின்  விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது.

இந்நிலையில்,19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்ந்து  தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.