நெல்லையில் மீண்டும் ஒரு சாதிய வன்கொடுமை சம்பவம் – பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்..!

நெல்லையில் மீண்டும் ஒரு சாதிய வன்கொடுமை சம்பவம் – பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்..!

caste

கடந்த 30-ஆம் தேதி நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்துள்ளது.

மேலும், அந்த இளைஞர்கள் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வடு மறைவதற்குள், மீண்டும் ஒரு சாதிய கொடுமை அரங்கேறி உள்ளது. அதன்படி நெல்லையில் ஆச்சி மடம் பகுதியில் பட்டியலின இளைஞர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த இளைஞரிடம், ஊர் மற்றும் சாதி பெயரை கேட்டு, அந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த இளைஞர் இதுதொடர்பாக காவல்துறையில் புகார் குற்றம் சாட்டியுள்ளார்.  பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின்பேரில் சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube