சென்னை தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Bomb Threat : சென்னை தலைமை செயலகத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

Read More – அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு!

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை வெடிகுண்டு வெடிக்கும் என தனியார் தொலைக்காட்சிக்கு செல்போன் மூலம் மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இந்த அழைப்பு குறித்து மாநில கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More – போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!

இதனைத்தொடர்ந்து உடனடியாக விரைந்து சென்ற, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழு சென்னை தலைமை செயலகம் முழுவதும் இன்று காலை முதல் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். மோப்ப நாய்களை கொண்டு தலைமை செயலகம் முழுவதும் உள்ள பேரவை கூடம் அமைச்சரவை முக்கிய அறைகள், வெளிப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கமல் – விஜய் பிறந்த நாள் வாழ்த்து.!

இதனால் தலைமை செயலகம் முழுவதும் பாதுகாப்பு வலைக்குள் கொண்டு வரப்பட்டது. எனவே, சென்னை தலைமை செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் முடிவில் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. மேலும், வேறு எதும் காரணங்களுக்காக அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment