சவுண்ட் சும்மா பிச்சிக்கும்..! அறிமுகமானது BoAt-ன் இம்மார்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ்.!

சிறந்த ஆடியோவைத் தரக்கூடிய புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்றவற்றிற்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான போட் (Boat), அதன் புதிய போட் இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு டிடபிள்யூஎஸ் (BoAt Immortal Katana Blade TWS) என்ற கேமிங் இயர்பட்ஸை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு கேமிங் இயர்பட்ஸ்கள் உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு உறையைக் கொண்டுள்ளன. இதில் இருக்கக்கூடிய கிளைடர் மற்றும் டைனமிக் ஆர்ஜிபி எல்இடி லைட்டுகள் இயர்பட்ஸ்களுக்கு மேலும் அழகைக் கூட்டுகிறது. இந்த இயர்பட்ஸ்கள் 50 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது.

அதோடு டைப்-சி போர்டுடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு கேஸில் 500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு இயர்பட்ஸும் 35 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. 13 மிமீ டிரைவர்கள் பேஸ் மற்றும் சிறந்த ஆடியோவை வழங்குகின்றன.

10 மீ தூரம் வரை இணைப்பை உறுதி செய்யும் இந்த பட்ஸ், கேம் பிரியர்களுக்காக 50 எம்எஸ் லோ லேட்டன்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கேம் சவுண்ட் தாமதமாக கேட்காது. மேலும், ஐபிஎக்ஸ்4 (IPX4) வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட், டச் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் உள்ள புளூடூத் 5.3 மூலம் மொபைலில் எளிதாக இணைக்க முடியும்.

கன்மெட்டல் பிளாக், கிரே என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் போட் இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு இயர்பட்ஸ் ஆனது 10 சதவீத தள்ளுபடியுடன் ரூ.3,599 என்ற விலையில் போட் இணையதளத்தில் விற்பனைக்கு உள்ளது. இதற்கு ஒரு வருட உத்திரவாதம் மற்றும் 7 நாட்கள் ரீபிளேஸ்மென்ட் நிறுவனம் தரப்பிலிருந்து அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.