முக்காணியில் குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக கடையடைப்பு பஸ்மறியலால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று [7.8.2017.9.30 am  to 12.10 pm] முக்காணியில்  15நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து முக்காணி  பிரமுகர் M.கணேசன் தலைமையில் 2மணி நேரம் சாலை மறியல் நடந்தது,காலி குடங்களுடன் 1000 கணக்கான  முக்காணி  பொதுமக்கள் ஈடுபட்டனர் . கடையடைப்பும் நடந்தது.

அரசு அதிகாரிகள்ஏரல் பாலத்திற்கு கீழ்   உள்ள  குழாய்களில் சமீபத்தில்  சேர்மன்சாமி கொடைவிழாவில் அடைக்கப்பட்ட அடைப்புகளை நீக்கியதும் வாழவல்லான் குடிநீர்  வடிகால் வாரியத்திற்கு தண்ணீர்  வர துவங்கியது.இன்று  மாலை 6 மணிக்குள் பம்பிங் செய்யப்பட்டு நாளை காலை 7மணிக்கு முக்காணி பகுதிக்கு விநியோகிப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆற்றுக்குள் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கவும் தடைசெய்யப்பட்டுள்ளது

 போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தையில்  ஈடுபட்ட அரசு அதிகாரிகள் நாளை முதல் சீரான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததால் இரண்டு மணி நேரம் நீடித்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

போராட்டம் காரணமாக திருச்செந்தூர் , தூத்துக்குடி  பேரூந்துகள் மாற்றுப்பாதையில் சென்றன.

பேச்சுவார்த்தையில்  ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் அருள் பையாஸ் திருச்செந்தூர்  DSP சிபு, தூத்துக்குடி  ADSP ராஜாராம், குடிநீர்  வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லதம்பி ஆத்தூர்  இன்ஸ்பெக்டர் விஜயகுமார்,ஆறுமுகநேரி  இன்ஸ்பெக்டர்  சிவலிங்கம் உட்பட பலர் ஈடுபட்டனர் ,

author avatar
Castro Murugan

Leave a Comment