வேலை செய்யாவிட்டால் ஆப்புதான்; மத்திய அரசு அதிரடி!!!

வேலை செய்யாவிட்டால் ஆப்புதான்; மத்திய அரசு அதிரடி!!!

Default Image
சிறந்த நிர்வாகத்திற்காக செயல்பட வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் மத்திய அரசு, சரியாக செயல்படாத 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 381 சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளித்துள்ளது. சிலருக்கு சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தனி நபர் பயிற்சித்துறை இயக்குநரகம் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கையேடு: இது குறித்து கையேடு தயாரிக்கப்பட்டு பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதில், அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்யும் வகையில், நேர்மை மற்றும் திறமையான செயல்பாடு ஆகியவற்றை அரசு இரட்டை தூண்களாக கருதுகிறது. குறிப்பிட்ட காலம் தாண்டியும் அயல்நாட்டு பணியில் இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11,828 குரூப் ஏ அதிகாரிகளின் பணிதிறன் குறித்த ஆவணங்கள், ஆய்வு செய்யப்பட்டது. இதில் 2,953 ஐஏஎஸ்., ஐபிஎஸ்., ஐஎப்எஸ் அதிகாரிகளின் பணி திறன் குறித்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு: ஊழல் மற்றும் முறைகேட்டை ஒழிக்கும் வகையில், 19,714 குரூப் பி அதிகாரிகளின் பணி திறன் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து, 381 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒரு ஐ.ஏ.எஸ்., மற்றும் இரண்டு ஐ.பி.எஸ்., மற்றும் 99 குரூப் பிரிவு அதிகாரிகள் முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டது.10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 21 அதிகாரிகள் ராஜினாமா செய்ததாக கருதப்படுகிறது.5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 37 குரூப் ஏ அதிகாரிகள் பணி நீக்கம், கட்டாய ஓய்வு மற்றும் பென்சன் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர்.8 ஐ.ஏ.,எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட 199 குரூப் ஏ அதிகாரிகளுக்கு சம்பள குறைப்பு மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அந்த கையேட்டில் அமைச்சகம் கூறியுள்ளது
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *