மனிதனுக்கே ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருக்கும் இதே இந்தியாவில்தான் மாட்டிற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கும் சத்தீஸ்கர் பிஜேபி அரசு…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்திலும் பசுக்களுக்காக ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ராமன்சிங் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ராமன் சிங், பசு மாடுகளுக்கு உணவு, குடிநீர் வழங்க ஆம்புலன்ஸ்கள் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கோ சாலைகளில் ஆய்வு நடத்தப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் கோ சாலைகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் சத்திஸ்கர் முதலமைச்சர் ராமன்சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் பசுக்களுக்கு தனியாக 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

author avatar
Castro Murugan

Leave a Comment