ஆரவ் செய்த காரியம் இதுதான் வெளியானது

ஆரவ் செய்த காரியம் இதுதான் வெளியானது

Default Image
சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ்.
தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

                              வீடியோ வை பார்க்க இதை கிளிக் செய்யவும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா – ஆரவ் ஜோடிதான் ரொமான்ஸ் ஜோடி. டாஸ்க்களில் இந்த ஜோடிதான் டூயட் பாடும். இது காதலாக மாறி விட்டதோ என்றுதான் ரசிகர்கள் கருதினர்.
மனநோயாளிகளாக நடித்த போது காதல் தோல்வி போல நடிக்க கூட ஓவியாவினால் முடியவில்லை. ஆரவ்வைப் பார்த்து முத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தார்.
ஒரு கட்டத்தில் ஆரவ் காதலிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஓவியா மன அழுத்தம் காரணமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் குடும்பத்தினரை தனித்தனியாக பேசினார் கமல். ஓவியா காதலித்த ஆரவ்வை அழைத்து பேசினார். அதில், தான் ரகசியம் அம்பலமானது.
அப்போது கமல், ஓவியா உங்களிடம் போகும் போது என்ன கேட்டார் என்றார். அதற்கு ஆரவ் கூறுகையில், நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடு என்றார். எனக்கு ஓவியா முத்தம் கொடுத்தார். அதனை தான் ஓவியா திருப்பி கேட்டார் என்றார்.
முதலில் நான் முத்தம் கொடுக்கவில்லை. உண்மையிலேயே கொடுக்கவில்லையா என்று கமல் கேட்க, இல்லை சார் நான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார். சினேகன் சொன்னதினால் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறினார்.

வீடியோ வை பார்க்க இதை கிளிக் செய்யவும்

Join our channel google news Youtube