விஜய் அப்பாக்கு இப்படியும் ஒரு காதல் கதை

 விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பள்ளி பருவத்திலே படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இப்படத்தில் நந்தன், வெண்பா, கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா நடித்திருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் நான் பரமக்குடி, காமன்கோட்டையில் எட்டாவது படிக்கும் போது ஒருத்திய காதலித்தேன். அவள் தேவதை போல தெரிந்தால். நானும் கடிதம் கொடுக்க, அவளும் தந்தாள்.
ஆனால் அவளை என் மாஸ்டர் சைட் அடித்தார். என் நண்பர்களோடு சேர்ந்து அவரை உருட்டு கட்டையால் அடித்தோம். இது பெரிய விசயமாக ஊர் பஞ்சாயத்துக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
ஊரைவிட்டு போய்விடுங்கள் என கூறினார்கள். நான் அப்பெண்ணை கூப்பிடுங்கள். அவள் என்னை காதலிக்கவில்லை என சொல்லட்டும். அப்புறம் நீங்கள் சொன்னபடி ஊரைவிட்டு போய்விடுகிறோம் என்றேன்.
எதிர்பாராத விதமாக அப்பெண் என்னை யார் என்றே தெரியாது என சொன்னது என் நண்பர்களுக்கு பெரிய ஷாக். காதலுக்கு எதையும் செய்யும் துணிவு அப்போது தான் வரும்.
இது போது யதார்த்தமான காதல் கொண்ட இப்படத்தை காதலர்களுக்கு பிடிக்கும் என கூறினார்.

Leave a Comment