உடலுக்கு தண்ணீர் தேவை என்று எப்படி தெரிந்து கொள்வது?

உடலுக்கு தண்ணீர் தேவை என்று எப்படி தெரிந்து கொள்வது?

Default Image
சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிற்றர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை ஒரு லிற்றர் தண்ணீர் குடிக்கவே சிரமப்படும் அளவிற்கு நம்மை மாற்றிவிட்டது.
நம் உடலுக்கு தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சில அறிகுறிகளைக் கொண்டே கண்டுபிடித்துவிடலாம்.
நம்முடைய சருமம் வறண்டு காணப்படும். அடிக்கடி அரிப்பு, அலர்ஜி ஏற்படும். முகத்தில் பருக்கள் தோன்றும்.
உதடுகள் உலர்ந்து தோல் பிரிந்து வரும். சிலருக்கு உதடுகள் வெடித்து புண் கூட ஏற்ப்பட வாய்ப்புண்டு. லிப் ஆயில் போடுவது தற்காலிக தீர்வு தான் என்றாலும் போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும்.
உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் அடிக்கடி தாகமெடுக்கும். குளிர்பானம் குடித்தால் உடலில் உள்ள தண்ணீரை அதிகம் உறியும் என்பதால் குளிர்பானங்களை தவிர்த்திடுங்கள். தொண்டை எப்போதுமே வரண்டு காணப்படும்.
உடல் முழுவதும் ரத்த ஓட்டம் ஏற்பட தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் அதிக உடலுழைப்பு செய்யும் போது அல்லது ஓடும் போது தசை இறுக்கம் ஏற்படும்.
உடலில் போதுமான அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே அவை எலும்பு பிணைப்புகளில் சேரும் தேவையற்ற கொழுப்பை நீக்கும். அதோடு எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைத்திடும். தண்ணீர் இல்லாத போது கை கால்கள் அடிக்கடி சோர்வு ஏற்படுவதும் குறிப்பாக மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும்.
உடலின் ரத்த ஓட்டத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியம்.தண்ணீர் இல்லாத பட்சத்தில் ரத்த ஓட்டத்திற்கு அதிகப்படியான எனர்ஜி செலவாகும். இதனால் எப்போதும் சோர்வாகவே உணர்வர்.
உடலில் சேரும் நச்சுக்களை வியர்வையாகவோ, சிறுநீராகவோ வெளியேற்ற உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் நச்சுக்கள் உடலிலேயே சேர்ந்து அது நோய்த் தொற்று ஏற்பட காரணமாகிடும்.
உண்ணும் உணவுகளை சரியாக ஜீரணமாவதற்கு போதுமான அளவு தண்ணீர் இருக்க வேண்டும். அது இல்லையென்றால் சரியாக ஜீரணமாகாமல் அசிடிட்டி ஏற்படுத்திடும் அத்துடன் அடிக்கடி பசி உணர்வையும் ஏற்படுத்தும்.
பசிக்கும் போதெல்லாம் உணவுகளை எடுத்துக் கொண்டு செரிமானத்தை இன்னும் சிக்கலாக்கும் வேலையை செய்யாமல் தண்ணீர் நிறைய குடித்தாலே இது போன்ற பிரச்சனைகள் வராது.
Join our channel google news Youtube