பாக்டீரியாவில் இருந்து வெளியேறும் தங்கம்!!!

Cupriavidus metallidurans என்ற வகை பாக்டீரியாவிலிருந்து தங்கத்தை எடுக்க முடியும். இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதாரத்துடன் நிறுபித்துள்ளானர். அதை பற்றி விரிவாக காண்போம். 

 

Cupriavidus metallidurans பாக்டீரியா விஷத்தை தங்கமாக மாற்றுகிறது. கோல்டு குளோரைடில் இருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்த பாக்டீரியா.
 
கோல்ட் குளோரைடை பாக்டீரியாவின் உள்ளே செலுத்தினால், தங்க அயனிகள் விஷமாக மாறுகிறது. இதிலிருந்து தன்னை பாதுகாத்துகொள்ள delftibactin A என்ற புரதத்தை பாக்டீரியா உருவாக்குகிறது.
 
இதனால் பாக்டீயாவின் மேல்புறத்தில் தங்கம் வெளியேற்றப்படுகிறது என ஆராய்ச்சியில் நிறுபிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியாவை கொண்டு தண்ணீரில் கரைந்த தங்கத்தை பிரித்து எடுக்க முடியும்.
 
இந்த பாக்டீரியா பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
author avatar
Castro Murugan

Leave a Comment