வெள்ளை மாளிகை அதிகாரி ராஜினாமா.., அமெரிக்காவில்பரபரப்பு!!

By

வாஷிங்டன் : ராஜினாமா… ராஜினாமா என்று அதிரடித்து வெளியேறி உள்ளார் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இருந்த சீன் ஸ்பைசர் (45). டெனால்ட் டிரம்பின் நெருங்கி நண்பராக இருந்தார். அதிபர் தேர்தலின் போது டெனால்ட் டிரம்பின் பிரசாரத்திற்கு பெரிதும் உதவி இருந்தார்.

இதனால் இவரை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளராக நியமித்தார் டிரம்ப். இந்நிலையில் சீன் ஸ்சைபசர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து பரபரப்பை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக ஏ.பி. மற்றும் ராய்டர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ,கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்தொடர்பு துறை இயக்குனராக ஆன்டணி ஸ்க்ராம்மூஸி நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனத்திற்கு ஸ்பைசர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். ஸ்க்ராம்மூஸி நியமனத்தில் டிரம்ப் தவறு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து டிரம்ப்பின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்ததையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவ்வாறு அந்த செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் -ன்  நெருங்கிய நண்பர் ராஜினாமா செய்தது அமெரிக்காவில் பரபரப்பை எபடுத்தி இருக்கிறது.

Dinasuvadu Media @2023