இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆவல்!!

இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா ஆவல்!!

Default Image

வாஷிங்டன், ஜூலை 20 விண்வெளி, கணினி பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திடம் செனட் அவை குழு வலியுறுத்தி யுள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் (மேலவை) செல்வாக்கு மிகுந்த குழுவாக கருதப்படும் பாதுகாப்புப் படை களுக்கான குழு, செனட் அவையிடம் 600 பக்கங்களைக் கொண்ட ஓர் அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையானது, செனட் சபையில் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அதிகாரச் சட்டம் என்னும் பெய ரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதா வது:வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார சக்தியாகவும், முக்கிய பாதுகாப்பு கூட்டாளியா கவும் திகழும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள், கூட்டாளி நாடுகளுள் ஒன்றாக இடம்பெறும் தகுதி இருப்பதாக குழு கருதுகிறது. அமெரிக்காவை மேலும் முன் னோக்கி கொண்டு செல்வதற்கான பாதை என்று பார்த்தோமானால், இந்தியாவுடன் முக்கிய பாது காப்பு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், கணினி பாதுகாப்பு, விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியாவுடன் மிகவும் நெருங்கி ஒத்துழைப்பை அமெரிக்கா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.ஆண்டுதோறும் மலபார் ஒத்திகை என்ற பெயரில் இந்தி யாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தும் கடற்படை ஒத்திகையை தொடர வேண்டும். இந்த ஒத்திகையில், ஜப்பானும் தற்போது இணைந்திருப்பது மேலும் பயனைத் தந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பில் நிர்ணயிக்கப் பட்டிருந்த இலக்குகளை எட்டு வதில் இடைவெளி ஏற்பட்டி -ருப்பது கவலையளிக்கிறது.

Join our channel google news Youtube