உலக நாயகனை கோழை என்று சொன்ன ஹெச்.ராஜா…..!

உலக நாயகனை கோழை என்று சொன்ன ஹெச்.ராஜா…..!

Default Image

நடிகர் கமல்ஹாசன் ஒரு முதுகெலும்பில்லாத கோழை எனவும், அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது எனவும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எல்லா அரசு துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் பலர் கமல்ஹாசனை கடுமையாகவும், ஒருமையாகவும் விமர்சித்தனர். அவர் ஒரு ஆளே கிடையாது என கீழ்தரமாக கருத்து தெரிவித்தனர். சிலர், அவரை மிரட்டும் தொனியில் பேசினர். 
இந்நிலையில், நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் ‘முடிவெடுத்தால் யாம் முதல்வர்’ என கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை ஆங்கில பத்திரிக்கையில் வெளியாகிறது எனவும் கூறியிருந்தார். எனவே, அவர் அரசியலுக்கு வருகிறார் என அனைவரும் பேசி வருகின்றனர். 
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா “எல்லோருக்கும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால், விஸ்வரூபம் படம் வெளியாவதில் இஸ்லாமியர்களால் சிக்கல் ஏற்பட்ட போது, அழுது புரண்டு, தான் இந்த நாட்டை விட்டே செல்வேன் எனக் கூறிய முதுகெலும்பில்லாத கோழை கமல்ஹாசன். எனவே, அவர் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறவதற்கு வாய்ப்பே இல்லை” என கீழ்த்தரமாக கருத்து தெரிவித்தார். 
அவரின் இந்த கருத்து, கமல்ஹாசன் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
Join our channel google news Youtube