ஒருநாள் போட்டிகளில் அரை சதம்:உற்சாகதில் புவனேஷ்வர்!!

இலங்கை அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் 
மிக இக்கட்டான கட்டத்தில் களமிறங்கி பொறுப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு உதவிய வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், தனது அந்த ஆட்டம் குறித்து கூறியதாவது: நான் பேட் செய்வதற்காக உள்ளே சென்றபோது, ‘பதற்றம் வேண்டாம்… இயல்பாக விளையாடு, டெஸ்ட் போட்டி மாதிரி நினைத்துக் கொள்’ என்று டோனி ஆலோசனை கூறினார். ஏராளமான ஓவர்கள் இருந்ததால், களத்தில் தாக்குப்பிடித்து நின்றாலே போதும்… எளிதாக ஜெயித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஏற்கனவே ஏழு விக்கெட் வீழ்ந்திருந்ததால், இழப்பதற்கு எதுவுமில்லை என்ற மனநிலையில் இருந்தேன். கடைசி வரை டோனிக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். ஒருநாள் போட்டிகளில் அரை சதம் அடிப்பேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. அதை விட இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

Leave a Comment