மலாலா எழுதிய புதிய புத்தகத்தை முதல் முதலாக படித்த அவரது தாய்!!

லண்டன்: மலாலாவின் மேஜிக் பென்சில் என்ற புதிய புத்தகத்தை மலாலாவின் தாய் முதல் முதலாக படித்தார்.
பாகிஸ்தானை தாலிபான்கள் எவ்வாறு கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் அந்நாட்டைச் சேர்ந்த மலாலா தெரிவித்தார். இதனால் கடந்த 2012-ஆம் ஆண்டு தாலிபான்கள் அவரை துப்பாக்கியால் சுட்டதில் அவரது நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர் காப்பாற்றப்பட்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
அமைதிக்கான நோபல்
பெண்களின் உரிமை, கல்வி ஆகியவற்றுக்காக போராடியதால் மலாலாவுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐ.நா. சபையில் இளம் வயதில் உரையாற்றிய பெருமையையும் பெற்றார். இவர் ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

முதல் பட புத்தகம்
இவர் எழுதிய முதல் பட புத்தகத்தில் முதல் பிரதி லிட்டில் பிரௌன் அன்ட் கம்பெனியிலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டது. புத்தகத்தை அக்டோபர் 17-ஆம் தேதி வெளியிட மலாலா உத்தேசித்துள்ளார்.

புத்தகத்துடன் போஸ்
புத்தகத்தின் முதல் பிரதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பெயர் மலாலாவின் மேஜிக் பென்சில். அந்த புத்தகத்தின் சுருக்கவுரையில் அவரை பற்றியே அவர் கூறியிருக்கையில், பாகிஸ்தான் சிறுவயதாக இருந்தபோது மேஜிக் பென்சிலுக்கு ஆசைப்பட்டார். அதன் மூலம் அனைவரையும் மகிழ்விக்கவும், அவரது நகரத்தில் இருந்த சிறிய குப்பைகளை ரப்பரால் அழிக்கவும், காலையில் கூடுதல் நேரம் உறங்கவும் விரும்பினார். ஆனால் சிறிது வளர்ந்தவுடன் முக்கிய விஷயங்கள் இருப்பதை பார்த்தார். உலகில் சிலவற்றை சரிசெய்ய வேண்டும் என்பதையும் மலாலா பார்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தாய் படித்ததில் மகிழ்ச்சி
அண்மையில் ஆங்கிலம் கற்று வரும் தனது தாய் தனது புதிய புத்தகத்தை முதன் முதலாக படித்ததில் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டுவிட்டர் பக்கத்தில் மலாலா குறிப்பிட்டுள்ளார். தனது தாயுடன் மலாலா இருக்கும் புகைப்படம் இருந்த டுவீட்டுக்கு 2,600 முறை ரீடுவீட் செய்யப்பட்டுள்ளது. 23,000 முறை லைக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் நல்ல கருத்துகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

Leave a Comment