விஸ்வரூபம் எடுக்கும் விஜயபாஸ்கர் வழக்கு..,

விஸ்வரூபம் எடுக்கும் விஜயபாஸ்கர் வழக்கு..,

Default Image

குட்கா தயாரிப்பாளர்களிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை, வருமான வரித்துறை யினர் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்று விசாரணைக்கு ஆஜராக, உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஏப்ரலில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகில் உள்ள, விஜயபாஸ் கருக்கு சொந்தமான வீடு, குவாரி மற்றும் கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது.சென்னையில் அவரது நண்பர் வீட்டில் சிக்கிய, வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய், பணம் வினியோகித்தது தொடர்பான ஆவணங் களால், ஆர்.கே.நகர் தேர்தல் நின்று போனது.பின், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு தொடர்பாக, விஜய பாஸ்கரின் தந்தை மற்றும் மனைவி ராதிகாவிடம், அதிகாரிகள், சென்னை அலுவலகத்தில்விசாரணை நடத்தினர். விஜயபாஸ்கரும், இரு முறை ஆஜரானார். இதற் கிடையில், அவரது வீடுகளில் நடந்த சோதனை தொடர்பான வழக்குகள், சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவின் தலை மையகத்திற்கு, ஜூனில் மாற்றப்பட்டன. இதனால், வழக்கு விசாரணை மீண்டும் வேகம் எடுத்துள்ளது.இந்நிலையில், ‘தடை செய்யப்பட்ட குட்கா தயாரிப்பாளர்களிடம், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலால் அம்பலமாகி உள்ளது. ‘அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சட்டசபையில், தி.மு.க.,வும் குரல் எழுப்பியது.இந்நிலையில், விஜயபாஸ்கரின் தந்தை சின்ன தம்பி, சென்னை, வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில்,ஜூலை,15ல் ஆஜரானார்.

அப்போது, சில ஆவணங்களை தரும்படி, அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை நடத்த, வருமான வரித்துறையினர் திட்டமிட்டனர். மீண்டும் அதன்படி, விஜயபாஸ்கரை, வருமான வரித் துறையினர் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறுகை யில், ‘இன்று காலை ஆஜராகும்படி, விஜய பாஸ்கருக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.

Join our channel google news Youtube