வலி நிவாரணியாக உதவும் சமையலறை பொருட்கள்

வலி நிவாரணியாக உதவும் சமையலறை பொருட்கள்

Default Image
உடல் வலிகளுக்கு அடிக்கடி மாத்திரைகள் எடுப்பதை தவிர்த்து, வலி நிவாரணியாக செயல்படும் இயற்கையான உணவுகளை சாப்பிட்டால், பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

செர்ரி

 செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை.

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

சிறிய செர்ரி பழங்கள், பாதிக்கப்பட்ட தசைகளை சரிசெய்து, கடுமையான தசை வலியில் இருந்து உடனடி நிவாரணம் தருவதால், தினமும் உடற்பயிற்சி செய்த பின் ஒரு டம்ளர் செர்ரி பழத்தின் ஜூஸை குடிக்கலாம்.

பூண்டு

பூண்டு தாவரம் ஒரு மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை. இவை பருவகாலத் தாவரங்கள். நிலத்துக்கு மேல் உள்ள இதன் பகுதிகளான இலை, தண்டு என்பன குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே காணப்படும். அதன் பின்னர் அவை அழிந்து விடுகின்றன.

பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது. இரத்தக் குழாயில் கொழுப்புப் படியாது.
கட்டிகள் கரைய பூண்டை அரைத்துப் பற்றிட வேண்டும்.
பூண்டைப் பாலில் காய்ச்சியும், ஊறுகாயகவும், லேகியமாகவும் செய்து தொடர்ந்து சாப்பிட்டால் ஊளைச் சதை குறையும். உடல் எடையும் குறையும்.
பூண்டு பல்லை தட்டி ஆலிவ் ஆயிலில் போட்டு சூடேற்றி, அந்த எண்ணெய் கொண்டு மூட்டுகளுக்கு மசாஜ் செய்து வந்தால், மூட்டு வலிகள் குணமாகும்.

இஞ்சி

இஞ்சியை உணவில் தினசரி சேர்த்து வந்தால், அது தசை மற்றும் மூட்டு வலிகளை குணமாக்கி, வீக்கத்தை குறைக்கும்.

இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும். காசம், கபம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் உணவில் உள்ள மக்னீசியம், பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்பு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

திராட்சை

தினமும் 1 கப் திராட்சையை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முதுகுப் பகுதியின் ரத்தோட்டத்தை அதிகரித்து, முதுகு மற்றும் இடுப்பு வலியைக் குறைக்கிறது.

கிராம்பு

கிராம்பு பல்வலிக்கு சிறந்த நிவாரணியாகும். எனவே பல்வலி இருக்கும் போது, கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலியில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம்.

Join our channel google news Youtube