ஒரு ஊழல்வாதியா..? துணை ஜனாதிபதி வேட்பாளர்:எம் பி ஜெயராம் ரமேஷ்

ஒரு ஊழல்வாதியா..? துணை ஜனாதிபதி வேட்பாளர்:எம் பி ஜெயராம் ரமேஷ்

Default Image

டெல்லி:ஸ்வர்ண பாரத் டிரஸ்டின் நிர்வாக டிரஸ்டி வெங்கய்யா நாயுடுவின் மகள். இதற்கு ரூ 2 கோடி அளவுக்கு தெலுங்கானா அரசு சலுகை வழங்கியிருப்பதாக காங்கிரஸ் எம் பி ஜெய்ராம்ரமேஷ் குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கு நாயுடுவின் பதில்:”இப்படி சலுகை இதற்குமுன்பு வேறு டிரஸ்டுகளுக்கும் வழங்கப் பட்டுள்ளது”. (டிஒஐ ஏடு)

அதாவது தனது குடும்பம் மட்டுமல்ல வேறு சிலரும் இதே பலனை அடைந்திருக்கிறார்கள் என்கிறார். நான் மட்டுமா அயோக்கியசிகாமணி வேறு சிலரும்தான் என்கிறார்! ஹர்ஷா டொயொட்டா எனும் கம்பெனி நாயுடுவின் மகனுக்கு சொந்தம். அதற்கும், முதல்வர் சந்திரசேகரராவின் மகனுக்கு சொந்தமான கம்பெனிக்கும் ரூ 271 கோடிக்கு போலிஸ்வாகனங்கள் வாங்கும் ஆர்டரை கொடுத்துள்ளது தெலுங்கானா அரசு என்கிறார் ரமேஷ். இவர்கள் தனி மாநிலம் கேட்டது எதற்கு என்று புரிந்ததா? நாயுடுவே தலைவராக இருப்பது குஷாபாவ் தாக்கரே நினைவு டிரஸ்ட். அதற்கு 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது ம பி யின் பாஜக அரசு. அது முறைகேடானது என்று ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் என்கிறார் ரமேஷ். எப்படிப்பட்ட யோக்கியரை துணை ஜனாதிபதியாக நிறுத்தியிருக்கிறார்கள் பார்த்தீர்களா! பாஜகதான்
ஊழல் இல்லா ஆட்சி நடத்துகிறதாம்..!

Join our channel google news Youtube