சீனப் பெருஞ்சுவரில் புல்லட் ரயில்!!!

சீனப் பெருஞ்சுவரில் புல்லட் ரயில்!!!

Default Image

சீனாவின் ஜாங்ஜியாகு நகரில் வரும் 2022-ஆம் ஆண்டு பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு நடைபெறவுள்ளது. அதையொட்டி, அந்த நகரை மேம் படுத்தும் விதமாகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அந்த நகரை நாட்டின் அதிவிரைவு ரயில் போக்குவரத்துடன் இணைக்கும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.தலைநகர் பெய்ஜிங் – ஜாங்ஜியாகு நகர் இடையேயான பாதையில் சுமார் 12 கி.மீ. நீளமுள்ள சிக்கலான பாதை சீனப் பெருஞ்சுவருக்கு அடியில் அமைந்துள்ளது. இதற்காக சுமார் 430 மீட்டர் ஆழத்தில் பாதாள ரயில் பாதை அமைக்கப்படுகிறது. பெருஞ்சுவருக்கு நேர் அடியில் ஒரு பாதாள ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.புல்லட் ரயில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. பெய்ஜிங்கிலிருந்து ஜாங்ஜியாகு வரையுள்ள தூரம் 174 கி.மீ. புல்லட் ரயிலால் பெருஞ்சுவருக்கு எந்த பாதிப்பும் நேராது என்றும், ரயில் பாதை மிக ஆழத்தில் இருப்பதால், ரயில் பாதை அமைந்துள்ள நில மேற்பரப்பில் உள்ள விவசாய நிலங்களுக்கும் எந்த பாதிப்பும் i என்றும் பொறியாளர்கள் கூறினர்.

Join our channel google news Youtube