கிரிக்கெட் வீரர்களின் தேர்விலும் இடஒதுக்கீடு வேண்டும்:அமைச்சர் ராம்தாஸ் அதாவலே..!

கிரிக்கெட் வீரர்களின் தேர்விலும் இடஒதுக்கீடு வேண்டும்:அமைச்சர் ராம்தாஸ் அதாவலே..!

Default Image
டெல்லி:இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் இடஒதுக்கீடு கடைப்பிடிப்பது குறித்து யோசிக்கவேண்டும். இதுகுறித்து நான் முதல்முறையாக இப்போது பேசவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்பு இக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலிடம் பேசவுள்ளேன் என்றார்.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து குறித்து பேசிய ராம்தாஸ் அதாவலே, எனக்கு அந்தத் தோல்வியில் சந்தேகம் உள்ளது. அதற்கு முன்பு பாகிஸ்தானை எளிதாகத் தோற்கடித்தோம். எனவே இறுதிசுற்றில் தோற்றது சந்தேகத்தை உருவாக்குகிறது என்றார்.
Join our channel google news Youtube