புரோ கபடி லீக்: கெத்தாக களம் இறங்கும் தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி லீக்: கெத்தாக களம் இறங்கும் தமிழ் தலைவாஸ்!

Default Image
கபடி… கபடி… கபடி என்று செம கெத்தாக இன்று களம் இறங்குகிறது தமிழ் தலைவாஸ் டீம்.
புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக்கின் 5வது சீசன் இன்று தொடங்குகிறது. இதன் தொடக்க விழா ஐதராபாத் நகரில் நடக்கிறது. இதில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அக்சய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் என்.பிரஸாத், அல்லு அரவிந்த் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 
முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக கிரிக்கெட் பிரபலம் சச்சின் உள்ளார். இந்த அணி தூதராக நடிகர் கமல் ஹாசன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரீமியர் லீக் தொடர்களில் 2வது இடத்தில் புரோ கபடி லீக் உள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் கபடி லீக் தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Join our channel google news Youtube