நடிகர் கமலுக்கு ப.ஜா..எம்.பி ஆதரவு..,,

நடிகர் கமலுக்கு ப.ஜா..எம்.பி ஆதரவு..,,

Default Image

சென்னை:கமல் கோரிக்கையை அடுத்து, தமிழக அமைச்சர்களின் இணையதள முகவரி மற்றும் மொபைல் எண்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.நடிகர் கமலுக்கும், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ள வார்த்தை மோதல், சற்று அடங்கியுள்ள நிலையில், கமல் ரசிகர்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். ‘தமிழகத்தில் நடைபெறும் ஊழல்களை, ஆதாரத்தோடு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு புகாராக அனுப்புங்கள்’ என, கமல் கோரிக்கை விடுத்திருந்தார்.இதையடுத்து, அவரது ரசிகர்கள், தமிழக அமைச்சர்களின் முகவரி மற்றும் மொபைல் போன் எண்களை, ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். மேலும், ‘தமிழகம் முழுவதும், கமல் அரசியலுக்கு வரவேண்டும்’ என, கோரிக்கை விடுத்து, பேனர் மற்றும் சுவரொட்டிகளை வைத்து வருகின்றனர்.இந்நிலையில், பா.ஜ., – ராஜ்யசபா, எம்.பி., இல.கணேசன் கூறுகையில், ”கமல் பற்றி, எச்.ராஜா கூறியது அவரது தனிப்பட்ட கருத்து; கமல் அரசியலுக்கு வர வேண்டும்,” என்றார். கமலுக்கு ஆதரவாக, இல.கணேசன் கூறிய கருத்து, கமல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.கமல் அரசியலில் வருவதற்கு இது ஒரு முனேற்ற பாதையாக அமைந்துள்ளது..

Join our channel google news Youtube