சென்னையில் கத்திமுனையில் மணிப்பூர் பெண் பலாத்காரம்!

சென்னை: சென்னையில் வீடு புகுந்து கத்தி முனையில் மணிப்பூர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதம்பாக்கம் பெரியார் நகரில் மணிப்பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு விழித்த அந்தப்பெண் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது வெளியே நின்ற இளைஞர் ஒருவர் அவரை தாக்கி உள்ளே தள்ளியுள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை சுதாரிப்பதற்குள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டிய அந்த இளைஞர் அவரை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தனியாக வசித்து வந்த வெளிமாநில இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment