புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு..!

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் எம்எல்ஏக்கள் பாஸ்கரன், அன்பழகன் ,வையாபுரி ஹஸன்னா ஆகிய 4 பேரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர்செல்வம் செல்வம் அணி தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்து தற்போது அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கின்றனர்.தினகரன் அணி மட்டும் தான் தற்போது தனிமைபடுத்த பட்டிருகிறது. இதனால் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் மேலும் பரபரப்பை இந்நிகழ்வு உண்டாக்கியுள்ளது.

Leave a Comment